உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மறைமலையம் -34 *

தொட்டாற் சிவக்குந் திருமேனித்

துங்கம்' நிறைந்த நெற்றிக்கண் துடியைத் தாங்குஞ் சிவனார்கொள் துய்ய வெண்மைத் திருநீறும்

பொட்டுந் துலங்கப் பொலிவேற்றுப் பொற்பைக் கூட்டுந் திருக்காட்சி

பொருள்சே ரினிமைச் சொற்கவியுள்

பொருந்தி வாய்த்தாற் போலிருக்க

அட்டால் குறையாச் சுவைப்பாலாய்

அமைந்த உள்ளப் பண்பொழுக

அறிவின் திறத்தால் ஆய்ந்ததெலாம்

அகற்றாக் கொள்கைப் பிடிப்பாக்கிச்

சுட்டும் முனர்தா னுவந்தருளு

சுகமே கனியே தாலேலோ சுவைக்குத் தமிழ்செய் தூமணியே சுடரே தாலோ தாலேலோ

28

1. பெருமை, உயர்வு.

2. காய்ச்சினால்.

அடிகள் தம்மிடம் எவரேனும் ஒரு கருத்தைக் கேட்பதற்கு முன்னர் கேட்போரின் குறிப்பறிந்து இன்னதெனக் கூறும் இயல்பினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/169&oldid=1595058" இலிருந்து மீள்விக்கப்பட்டது