உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

145

(வேறு)

அழகுறு கொண்டை யணியெனக் கொண்ட

அன்பா தாலேலோ

ஆங்கில வடநூ லகலமு மாய்ந்த

அறிவா தாலேலோ

பழகிட மேன்மை பயந்திடு கேண்மைப் பண்பா தாலேலோ

பைந்தமிழ் வையம் பயனுற வருளும் பரிவா தாலேலோ

கழலிணை' மாட்சி கருத்தினிற் பூண்ட

கனியே தாலேலோ

கற்றவர் போற்றுந் தனித்தமிழ் கண்ட

கடலே தாலேலோ

நிழலினைக் கூட்டுந் தமிழ்மொழி யொப்பும்

நிலையே தாலேலோ

நெஞ்சினில் மாந்தர் நினைவுறத் தாங்கும் நிறைவே தாலேலோ.

29

1. சிவபெருமானின் வீரக் கழல்

2. தன்பால் வந்தாரை வாழ்விக்கும் தண்ணிய தமிழ்மொழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/170&oldid=1595059" இலிருந்து மீள்விக்கப்பட்டது