உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மறைமலையம் -34 *

(வேறு)

முப்பா லாய்ந்துமு ழுப்பயன் தந்த

முகிலே தாலேலோ

முழங்கிய வள்ளுவ ராண்டினைக் கண்ட

முதலே' தாலேலோ

தப்பாத் திருமறைச் சத்தினை யெல்லாந்

தந்தாய் தாலேலோ

2

தனித்திரு வாசக உரையினை ஈந்த

தமிழே தாலேலோ

ஒப்பாக் கொள்கையு ரைத்திடும் நூலை

3

யுன்னாய் தாலேலோ

4

உணர்விலி நெஞ்சுளுந் தெளிவினை ஊட்டும்

ஒளியே தாலேலோ

செப்பார் நகில்சீர்த் திருபுனை மங்கை

சேர்ந்தாய் தாலேலோ

செந்தமிழ் போற்றியே வந்தனை செய்யு

செல்வா தாலேலோ.

30

1. வள்ளுவராண்டு எனக் குறிப்பிடும் வழக்கை அடிகள்தாம் தோற்றுவித்தனர்.

2. அடிகள் திருவாசகத்தில் சில பகுதிகளுக்கு விரிவான ஆய்வுரை எழுதியுள்ளார்.

3. நினையாய்.

4. அறியாமை மிக்கவர் உள்ளத்திலும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/171&oldid=1595060" இலிருந்து மீள்விக்கப்பட்டது