உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

4. சப்பாணிப் பருவம்

சப்பாணிப் பருவம் என்பது குழந்தையைக் கைகொட் டி விளையாடுமாறு கூறுவதாக அழைக்கும் பருவமாகும். ஒன்பதாம் மாதத்தில் குழந்தை உட்கார ஆரம்பித்த பிறகு கையாட்டுதல், கைகொட்டுதல் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகள் அதனிடத்தே தோன்றுவது இயல்பு. பெற்றோரும் மற்றோரும் கைகளைச் சேர்த்துத் தட்டிக்காட்டிக் குழந்தையை அழைப்பதோடு, கைகொட்டிக் காட்டும் படியும் கூறுவர். குழந்தை அதற்கேற்ப‘சப்’ என்ற ஒலி உண்டாகும்படி பாணி (கை) யைக் கொட்டும்.

ஆசிரியர் தாம் எடுத்துக்கொண்ட தலைவராகிய குழந்தை யின் கையைக் குறிப்பிடும்போது, இன்ன சிறப்புக்களையுடைய கைகளினாலே ஓசை எழுப்புக என்று கைக்குரிய பெருமையைச் சேர்த்துக் கூறுவது மரபு. குழந்தை நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும் அமைப்பைச் சப்பாணி என்று கூறும் வழக்கம் உண்டு. சப்பாணி என்பதற்குச் சகபாணி எனப்பிரித்து, சக என்பது உடன், பாணி யென்பது கை, இரண்டு கைகளையும் கைகளையும் உடன் சேர்த்துக் கொட்டுதல் எனப்பொருள் கூறுதலும் உண்டு.

'ச'என்றால் சேர்த்தல் என்றும் பொருள் கொண்டு கைகளைச் சேர்த்து ஒலியெழுப்புதல் எனவும் கூறலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/172&oldid=1595061" இலிருந்து மீள்விக்கப்பட்டது