உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மறைமலையம் -34 *

4. சப்பாணிப் பருவம்

(ஆசிரிய விருத்தம்)

வண்டுணர்ந் தறியாத வளரளி மலர்1 தன்னை

வடிவான கூந்தலின்மேல்

வட்டமுற இட்டுமதி கிட்டவர லொத்தவகை

வளமான வாழ்வுவாழ

தண்டமிழ்த் தனிமேன்மை தனையறிந் துலகுக்குத் தணியாத ஆர்வமோடு

தந்ததொரு வள்ளலின் தங்குபுகழ் மார்பினைத் தனதாக்கிக் கொண்டுவந்தே

கண்டுரை2 மொழிபேசிக் கருத்தினிற் சுவையூட்டிக் கனிவாயினமுதமீந்து

கட்டழகு மிக்கபல மெத்தபுக ழுக்குரிய கவினார்ந்த மக்களீன்ற

தண்டிகை3 யமர்புகழ்ச் சௌந்தரம் நெஞ்சுளோய்

சப்பாணி கொட்டியருளே

தளராம லுலகாளுந் தனிநடத் தான்பிள்ளை சப்பாணி கொட்டியருளே.

ہیں

1. மலர்மொட்டு, வண்டு மொய்க்காத மொட்டை மலரும் செவ்வியிலேயே கூந்தலிற் சூடல் சிறப்பு.

2. கற்கண்டு போலினிய சொற்கள்.

3. பல்லக்கின் மேல் அமர்ந்து செல்வது போன்ற உயர்ந்த புகழ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/173&oldid=1595062" இலிருந்து மீள்விக்கப்பட்டது