உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

149

1

திருப்பெருந் துறையுறை' சீராளன் தன்மீது சிவபுரா ணம் பாடிய

திருவாச கப்பிரா னருள்வாச கத்தாழ்ந்து திறமான ஆராய்ச்சியைப்

பருப்பொரு ளுரையுடன் பகுத்துல களித்தவன் படித்தவ ரொப்புமாறே

பழந்தமிழ்க் கொள்கையே சைவசம யம்மெனப்3 பயன்கண்டு தான்செய்தவன்

திருக்குறட் சிறப்பினை யாராய்ச்சி செய்தவன் சிறுவர்க்கு மினிதாந்தமிழ்4

திரட்டியே தந்தவன் சிவஞான போதமெனுந்5 தெளிவான நூலோர்ந்தவன்

3

தருக்கினை யொழித்தவன் தான்கற்றுத் தேர்ந்தவன்

சப்பாணி கொட்டியருளே

தளராம லுலகாளுந் தனிநடத் தான்பிள்ளை

சப்பாணி கொட்டியருளே.

32

1. மாணிக்கவாசகருக்கு இறைவன் ஞானகுருவாய்த்தோன்றி அருளீந்த ஆவுடையார் கோயில் என்னும் இடம்.

2. திருவாசகத்தின் முதற்பகுதி.

3. சங்கத் தமிழ்க்கொள்கையை,

பிற்காலத்தார்

சைவசித்தாந்தம் எனக் கொண்டதாக அடிகள் ஆய்ந்துரைந்தார். ‘பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்' என்பது அடிகள் எழுதிய நூல்,

4. 'சிறுவர்க்கான செந்தமிழ்' என்பது அறிவுபுகட்டுங் கதைகளும், கட்டுரைகளும் அமைத்து அடிகள் சிறுவர்க்காய் எழுதிய நூல்.

5. மெய்கண்டார் அருளிய சைவசித்தாந்த நூல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/174&oldid=1595063" இலிருந்து மீள்விக்கப்பட்டது