உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

151

அணிபுனை தமிழ்ச்சீரை யறிவுடன் நெஞ்சத்தில் அணையேற்றி நாளுமாய்ந்தே

அறிஞர்க ளொப்பியே யகமாரப் போற்றிட

அனைத்தையு முறைப்படுத்தும்

பணியினைப் புரிந்துயர்ப் பரிவோடு நாளிதழ் பயனெண்ணி அச்சிலேற

பசுந்தரை மீதிலே யிளந்தென்றல் சூழஅமர் பான்மையென யின்பமேவ

நுணியசெந் தமிழ்நாகை நீலலோ சனியோடு நுகர்திரா விடமந்திரி

நுவலுசித் தாந்ததீ பிகையென்னுந் தாள்களில் நுணுகியா ராய்ந்ததெல்லாந்

தணிந்தலுங் குறைதலும் தாமின்றித் தந்தவா

சப்பாணி கொட்டியருளே

தனக்குவமை இல்லதோர் தனித்தமிழில் வல்லவா சப்பாணி கொட்டியருளே.

34

நாகப்பட்டினத்திலிருந்து வார இதழாக வெளிவந்த நீலலோசனியிலும், காரைக்காலிலிருந்து வெளிவந்த திராவிட மந்திரியிலும், அடிகளை ஆசிரியராகக் கொண்டு சென்னையி லிருந்து திங்கள் இதழாக வெளிவந்த சித்தாந்த தீபிகையிலும் அடிகள் காய்தல் உவத்தலின்றி கட்டுரைகளும், மறுப்புகளும் எழுதி வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/176&oldid=1595065" இலிருந்து மீள்விக்கப்பட்டது