உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மறைமலையம் -34 *

செய்1யெலா செழுந்தா மரைமேவு நன்னகர்

திருநடம் புரிகின்றவன்

திகழ்சைவ சித்தாந்த ஞானபோத செய்யத்

தெள்ளறிவு நல்கியருள்

மெய்யெலா முணர்ந்தஅம் பலவாணர் திருக்கூத்து மெச்சுமெந் தமிழர்மதம்

மிடுக்குள்ள கோகிலாம் பாள்கடி தங்களை

மிகநன்கு நூலாக்கியே

பொய்யெலா மில்லாது மக்கள்நூ றாண்டுகள்

புவிமீது வாழுவகையும்

பொருந்திடு முணவோடு பொருந்தாத உணவினைப் புரிந்திட எழுத்தாக்கியே

தையனா யகிபங்கன்’ தண்ணருளில் தந்தவா

சப்பாணி கொட்டியருளே

தனக்குவமை இல்லதோர் தனித்தமிழில் வல்லவா சப்பாணி கொட்டியருளே.

35

1. வயல்.

2. உமையொரு பாகனாய் சிவபெருமான்.

தமிழர் மதம், கோகிலாம்பாள் கடிதங்கள் மக்கள் நூறாண்டு வாழ்வதெப்படி, பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் என்னும் நூல்களை அடிகள் எழுதினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/177&oldid=1595066" இலிருந்து மீள்விக்கப்பட்டது