உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

(வேறு)

தருகொடை மழையெனத் திருவருட் பாவினைத்

தந்தபுகழ் ராமலிங்கந்

தனையறிந் துணரார்மம் மிருளினைப் போக்கிடச்

சளையாது வாதிட்டவன்'

மருளினை யொழித்திருள் மடமையை வெருட்டிடும் மன்னுபுகழ்த் திருவருட்பா

மதிப்பினை யுயர்த்திட மணிப்பொருள் விளக்கிய மறைமலைப் பேருற்றவன்

அருளினை யுயிர்களின் நலமதிற் புகுத்திட

அன்புரைகள் தாம்தந்தவன் அருமைசா குந்தல அணிநாட கந்தந்த

அரியமொழியுணர்வல்லுநன்3

குருவினைச் சிவனெனக் கொண்டவன் கண்டனன் கொட்டியருள் சப்பாணியே கொள்கையில் மாறாது வெல்வதில் வல்லவன் கொட்டியருள் சப்பாணியே.

153

36

1. வடலூர் வள்ளல் இராமலிங்கரின் திரு. அருட்பாப் பாடல்கள் பற்றி யெழுந்த, கருத்து வேறுபாட்டில் அடிகள் அருட்பாவின் சிறப்புகளைப் பல மன்றங்களில் எடுத்துரைத்து வென்றார்.

2.

காளிதாசரின்

சாகுந்தலத்தை

அடிகள்

வடமொழியிலிருந்து சாகுந்தல நாடகமெனத் தமிழில் மொழி பெயர்த்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/178&oldid=1595067" இலிருந்து மீள்விக்கப்பட்டது