உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மறைமலையம் - 34

மேடையெனும் நெஞ்சிலே மிக்கவருள் கொண்டுமே

மிடுக்காகக் கூத்தியற்றி

மிடி'யுடன் துன்பமும் மேவிவரு பீடையும் மின்னலெனத் தேய்ந்துமாய

ஆடையென வெம்புலித் தோலினைப் பூண்டினிய

வருள்தந்து காத்தளிப்போன்

அறிந்தார்க்கு விருந்தாகி யன்புமழை கொட்டிடும்

அம்பலவா ணன்றன்னையே

ஓடையொடு தேன்சுனை யூற்றெழுந் தீஞ்சுவை

யுடையநறுந் தண்ணீரென

உயிருக்கு முடம்புக்கு முற்றதுணை மருந்தாக

வொப்பியுள மேன்றுகொண்டு

கோடையதில் வீசுமொரு குளிர்தென்ற லொத்தவன்

கொட்டியருள் சப்பாணியே

கொள்கையில் மாறாது வெல்வதில் வல்லவன்

கொட்டியருள் சப்பாணியே

1. வறுமை 2. நோய்

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/179&oldid=1595068" இலிருந்து மீள்விக்கப்பட்டது