உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

கத்திடுங் கடல்தன்னை முப்புறம் பெற்றினிய

கலைமாட்சி காத்துநாளும்

கருத்தீர்த்துப் புறநாடுங் கண்குளிரக் காணுவகை கட்டழகு மிக்கநாடாய்

எத்திசையு மேற்றநலம் பெற்றிளமை பூண்டதா லிருக்கின்ற செல்வமெல்லா

மிழுக்கின்ற காந்தமா யிலங்குதல் கண்டவ

ரெதிரியாய் நுழைந்ததாலே

நந்திடும்' பிறர்மொழி நந்தமிழ் மொழியிலே

நண்டுபோ லோடிவந்து

2

நடமாட லானதால் நயத்தமிழ் தன்னினிமை

நன்குணரா மக்களுக்குக்

கொத்தெனத் தனித்தமிழ் கொடுத்தசெங் கைசேர்த்துக்

கொட்டியருள் சப்பாணியே

கொள்கையில் மாறாது வெல்வதில் வல்லவா கொட்டியருள் சப்பாணியே.

155

38

1. வளர்ந்திடும்

2. நண்டு இடம் மாறி வந்து ஆட்சி பெறல் போல பிறமொழி தமிழில் ஆட்சிபெறல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/180&oldid=1595069" இலிருந்து மீள்விக்கப்பட்டது