உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

மறைமலையம் -34 *

(வேறு)

அறிதுயிலென்னும் பெருநிலை தன்னை அறிவால் முற்றாய்ந்தும்

அதைத்திரு நாவுக் கரசெனும் பிள்ளைக்

களித்தே நோய்தீர்த்தும்'

1

செறிவுற நன்கே தொலைவிலு ணர்தற்? சிறப்புத் தானேர்ந்து

சிறிதொரு நூலாய்ச் செயும்வகை கண்டு திறமை காண்பித்தும்

நெறியுற மெய்கண் டவர்திரு நாளை3 நினைவாய்க் கொண்டாடி நெடும்புகழ் மேவ அரும்பணி செய்து நிலைக்கும் பேருற்றும்

குறி4யினில் மாறாப் பெரும்புகழ் கண்டவ கொட்டுக சப்பாணி குறையா அழகிற் குரிமை கொண்டவ கொட்டுக சப்பாணி.

39

1. அடிகள் 'யோக நித்திரை' என்னும் அறிதுயிலின் பயிற்சியாலே தம் மகள் திருநாவுக்கரசருக்கு நேர்ந்த இளைப்பிருமல் நோயைத் தவிர்த்திருக்கின்றனர்.

2. ‘தொலைவிலுணர்தல் என்னும் மறைபொருளுணர்ச்சி’ என்பது அடிகள் எழுதிய நூல்.

3. சிவஞானபோதம் இயற்றிய மெய்கண்ட தேவர் திருநாளைச் வழிகோலினார்.

சன்னையில் கொண்டாட

அடிகள்

4. கொள்கை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/181&oldid=1595070" இலிருந்து மீள்விக்கப்பட்டது