உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

(சந்த விருத்தம்)

எளிமையு மருமையு முறுகொடைச் சிற்பமெ னப்பார்க்கு மிளமுலை யழகுறு சவுந்தரப் பொற்கொடிப் பெட்பேற்கக் களிதரு குறளருள் வழியினிற் புக்கற சொற்காத்துக்

கடவுளின் திருநிலை யுலகுறை மக்களு ளத்தோங்கத் தெளிவுற அழகுட னிசையினை யுட்கலத் தெக்காலுந் திறமெழுப் பிடவல சுவைதரு மற்புத நற்பாக்கள்

குளிருறு தமிழினில் தருபவ கொட்டுக சப்பாணி

கொடையென விசைதர வருபவ கொட்டுக சப்பாணி

157

40

அடிகள் மனைத்தக்க மாண்புடையாளாம் சௌந்தரப் பொற்கொடியோடு குறள்நெறியில் இல்லறங்காத்து, இறை யுணர்வு மக்களிடத்தில் தோன்றுமாறு இனிய, எளிய சுவை சேர் நற்பாக்களைத் தமிழில் தருபவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/182&oldid=1595071" இலிருந்து மீள்விக்கப்பட்டது