உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

5. முத்தப் பருவம்

முத்தப் பருவம் என்பது குழந்தையை முத்தம் கொடுக்க வருவாய் என அழைத்துப் பாடும் பருவமாகும். குழந்தை தரும் வாய்முத்தத்தால், குழந்தையை ஆரம் துய்க்கின்றன ஊற்றின்பத்தைப் பெற்றோரும், மற்றோரும் பெறுவர். இப்பருவத்தில் முத்தின் வகைகள் பலவற்றைக் கூறி, அவற்றிலே உள்ள குறைகளை எடுத்துக்காட்டி, குழந்தையின் முத்தப் பெருமையை விளக்கிப் பாடுதல் மரபு. குழந்தையின் பதினோராம் மாதத்தில் பாடப் பெறுவது. முத்தந்தரும் வாயின் சிறப்புக்கள் பலவற்றைக் கூறுவதும் மரபு. பிள்ளைத் தமிழ்ப் பருவங்களுள் மிகச் சிறப்பான பருவம் முத்தம் பருவமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/183&oldid=1595072" இலிருந்து மீள்விக்கப்பட்டது