உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

மறைமலையம் -34 *

(வேறு)

வீசிடுங் குளிர்தென்றல் தனைவிஞ்சு தண்டமிழ்

விளையாடு கின்றநாட்டில்

விரிவாகப் பலகற்ற பெரியாரும் தாய்மொழி விரும்பியே பேசிடற்குக்

கூசிய நிலைபோக்கிக் குறையினை நீக்கியே குழைகின்ற இன்சுவையைக்

கொடுத்தனை பருகிடக் குமிண்சிரிப் புடன் தமிழ்க் கோதையும் புன்னகைத்தாள்

பாசியும் படராது பைந்தமிழ் ஊற்றினைப் பரிந்துயிர் காத்திடல்போல்

பகலிலு மிரவிலும் பனியிலும் வெளியிலும் பரவிப்பு கழ்ந்துகாத்து

வாசி யாய்ச் செந்தமிழ் பேசிடவுந் தந்தவ

வருகவே முன்வருகவே

வளர்தமிழ்ப் புவிக்கென வள்ளுவ ராண்டினை

வழங்கினை முன்வருகவே

55

1.புன்சிரிப்பு

2. மிகுதி

தமிழ்மொழியில் பேசுதற்குக் கூசிய அக்காலத்தில் அடிகள் இனிமையாகப் பேசி அக்குறையை நீக்கிப் பிறரும் தமிழில் பேச ஆர்வந்தோற்றுவித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/199&oldid=1595088" இலிருந்து மீள்விக்கப்பட்டது