உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

(வேறு)

கதிரைப் பரப்பி யொளிகூட்டிக் கருமை யிருட்தீ தினையோட்டிக் கலகல் லெனவே யொலித்தோடிக்

கலக்கும் புனல்சேர் கடல்கிழித்து

முதிரா இளமை யொடுசுற்றி முறையா யுலகிற் குயிரூட்ட

முதிருங் கதிரைத் தருங்கழனி

முழுதும் பயிரை விளைவிக்கும்

கதிரோன் வருகை கண்டுவக்குங்

கமழ்ச்சி' மிகுசெந் தாமரைபோல்

கனியின் சுவையை மிஞ்சுதமிழ்க்

கடலுள் திளைப்பார் முகம்மலரப்

பொதிகைத் தென்றல் எனவருகை

புரிந்தாய் வருக வருகவே

பொலிவுந் திருவு மொளிவீசும்

பொன்னே வருக வருகவே.

1.நறுமணம்

175

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/200&oldid=1595089" இலிருந்து மீள்விக்கப்பட்டது