உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

❖ - 34 மறைமலையம் - 34

கடகநண் டுன்வீடு காசினியோர் நெஞ்சமிக்

கடகளிற் றுடையவீடாம்

கலைகளைப் பதினாறு கொண்டுளை இவன்கொண்ட

கலைகளறு பத்துநான்கு

குடையினை மட்டும்நீ கொண்டுவர இவன்மன்னர் குடையோடு பிறவுமுள்ளான்

கொண்டிலை நேர்மையு மொழுக்கமும் இவன்நேர்மை கொண்டொழுகு செம்மையாளன்

நடையொளி பரிதியால் பெறுவைநீ இவன்நடை நடந்திடில் பரிதிநாணும்

நவின்றஇத் திறங்களால் இவனுன்னில் மிக்கவன் நலஞ்சேர்க்க அழைத்தனன்காண்

அடைதலுக் கெளிதில்லா அருமந்த சேயுடன்

அம்புலீ ஆடவாவே

அறிவோங்கு மறைமலை யடிகளுளம் மகிழ்வுற

அம்புலீ ஆடவாவே.

சந்திரன்

கடகராசி சந்திரன் வீடு.

கலைகள்

64

பதினாறு மட்டுமே. மன்னர்க்கு வெண்

கொற்றக்குடையாக மட்டுமே உள்ளாய். நேர்மையும் ஒழுக்கமும் இல்லை. சூரியனால் ஒளி பெறுவாய்.

மறைமலையடிகள்

கடகளிறு போன்ற அடிகட்கு காசினியோர் நெஞ்சே வீடு. கற்ற கலைகளோ அறுபத்து நான்கு, மன்னரிடத்து குடையோடு பிறபேறுகளும் பெற்றவர். நேர்மை கொண்ட செம்மையாளர், நடைகண்டு சூரியன் நாணும்.

அருமந்த சேய் - அமுதம் போன்ற சேய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/209&oldid=1595098" இலிருந்து மீள்விக்கப்பட்டது