உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

குறுநடை பயின்றிட்ட பொழுதுன்னைத் தட்டென்று

கொண்டெட்ட வீசியெறிந்த

குமரவேள் மீதினில் பதினாறு வயதினில்

கொஞ்சுமொழி யாங்கிலத்தில்

நறுமணக் கவிதையும் வடித்துமணி வாசக நல்லுரையு செய்தளித்து

நாகநாட் டரசிவே ளாளர்நா கரிகமினும் நலமூட்டு கின்ற நூல்கள்

மறுவறச் செய்திட்ட மாபுகழின் மிக்கவன் மகிழ்வோடு நின்னையன்பாய்

மதிகொண்டு நூல்செய்ய மாட்டைநீ என்றாலும்

மாகருணை கொண்டழைத்தலால்

அறுபகை நெறிவென்ற பெரும்புகழ்ச் சேயுடன்

அம்புலீ ஆடவாவே

அறிவோங்கு மறைமலை யடிகளுளம் மகிழ்வுற

அம்புலீ ஆடவாவே.

185

65

அடிகள் தன் நோய் நீங்க திருவொற்றியூர் முருகன்மீது மும்மணிக் கோவை பாடி நோய் நீங்கப் பெற்றார். 'யோக நித்திரை’ என்ற தம் நூலில் அறிதுயில் மூலமாக நோய்களை நீக்குவது பற்றிக் கூறியுள்ளார். ஆதலால் சந்திரனே அடிகளிடம் வந்தால் நோய் நீங்கி மகிழலாம் என அழைப்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/210&oldid=1595099" இலிருந்து மீள்விக்கப்பட்டது