உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

மறைமலையம் -34 *

வீழ்தலு மெழுதலும் விளங்கிடு விண்மிசை

வெருட்டிடப் பாம்புளதால்

விரிந்திடு செஞ்சடை யடைக்கல மெனவே

விரைந்துடன் ஓடுதலால்

ஆழ்வினை யுறுத்திட மதிதடு மாறிடும்

அவலமும் போர்க்கிமதி

அடைந்திடத் தண்டமி ழமுதினைத் தந்தொளி யருளிடுந் தகையவனின்

சூழ்தரு மெண்கலை நூலறிந் துயர்ந்தவர்

சொக்கிடு முள்ளமுடன்

சொற்சுவை யமுதெனும் நற்றமிழ் மாந்திடச் சுற்றியும் நின்றிருக்க

வாழ்வினை யுனக்கெனத் தரவிழைந் தழைத்தான்

வாவம் புலிவாவே வளந்திகழ் பல்லா வரமுறை சேய்முன் வாவம் புலிவாவே.

1. சிவபெருமானின் சடைமுடி.

2. ஆராய்ந்து செய்த அறிவு நூல்.

67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/211&oldid=1595100" இலிருந்து மீள்விக்கப்பட்டது