உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம் துங்கக் கரிமுகத் தூயனைப் பழித்திடத்

தொடர்ந்திடுந் தீவினையும்

துடியிடை மடவார் தம்மிடம் மதியினைத் தொலைத்திடும் வல்வினையும்

பொங்கிக் குலவிடுங் கடல்நீர் திருடிடப்

புகுமுகில் தருவினையும்

பொலிவினைக் குலைத்துன் வடிவினை மாற்றிட

புறப்படு மூழ்வினையும்

கங்குல்1 தறிபட ஓட்டிடுங் கதிராய்க்

கனன்றிடு கண்ணொளியாய்க்

கவின்மிகு தமிழாய்த் திகழ்மறை யடியைக்

கண்டிட மாய்ந்திடலால்

வங்கந் தந்திடுந் தென்றலு சேர்த்துடன்

வாவம் புலிவாவே

வளந்திகழ் பல்லா வரமுறை சேய்முன்

வாவம் புலிவாவே.

1. இரவு, இருள்

187

68

நாரத முனிவன் சிவபெருமானிடம் கிடைத்தற்கரிய கனியைக் கொடுத்தபோது, சிவன் நான்முகனிடம் அக்கனியை யாருக்குக் கொடுக்கலாம் எனக் கேட்க, இளையவனான முருகப்பெருமானுக்குத் தருவதே சிறந்ததென நான்முகன் கூறினான். அது கேட்டு யானைமுகக் கடவுள் நான்முகனிடம் கோபமுற்றார், யானை முகனை வணங்கி நான்முகன் பொறுத்தருள வேண்டினான். அப்போது சந்திரன் எள்ளலாகச் சிரித்தான் அதனால் கோபமுற்ற யானை முகக்கடவுள் சந்திரனை ஒளியின்றி மறைந்து போகச் சாபமிட்டார்.

விநாயக புராணம் வசனம் - பக்கம் -181 (கழக வெளியீடு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/212&oldid=1595101" இலிருந்து மீள்விக்கப்பட்டது