உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

மறைமலையம் -34 *

தண்டம்:- வாராக்கால் அம்புலிக்கேற்படும் தீமையைச் சுட்டி அழைத்தல்.

தில்லை யாடிட வல்ல ஒருவனைச்

சிந்தை தன்னிலே கண்டவன்

1

செங்கை வீணையை மீட்டு மொருத்தியைச்

சிவந்த நாவிலே கொண்டவன்.

கல்வி மேம்படக் காட்டும் நற்கலை கற்றுந் தேர்ந்தசீர் வல்லவன் கலந்த வேற்றவர் மொழிக ளறிந்தவன் கற்பு மாறிட நல்லவன்

புல்லைச் செந்தமிழ் புகட்டி யம்பெனப் பொழிய வல்லமெய் யறிவினன் புரிந்து கொண்டுநீ வருக இல்லையேல்

புகலு மில்லைவீண் தொல்லைகாண்

அல்லல் தீர்த்திடும் பிள்ளை யானதால்

ஆட அம்புலீ வருகவே

அழகு பொங்கிடும் மறைமலையுடன்

ஆட அம்புலீ வருகவே.

1. தில்லையம்பலவாணன்.

2. கலைமகள்.

69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/213&oldid=1595102" இலிருந்து மீள்விக்கப்பட்டது