உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

189

மதியைத் தந்திடுங் கோளென் றுன்னையே'

மனத்தின் சொந்தமுந் தந்திறை மதித்துச் செஞ்சடை யேற்றி வைத்துமே மதியி ழந்துவீண் பேதையாய்

விதியைத் தன்கடை நோக்கில் மாற்றிடும் வியாழ குருபகை யுற்றனை விளைந்த இத்துயர் நீக்கத் தந்துணை விரைந்து காத்திட எண்ணிடும்

நிதியை, கண்கடைப் பார்வை யால்நலம் நிகழ்த்து விந்தைசேர் நுண்மதி நிறைந்த மறைமலைக் குருவை விட்டிடில் நிலைத்த துயருனை வாட்டிடும்

அதிரு மல்லலேன் அணைக்கு சேயுடன் ஆட அம்புலீ வருகவே அழகு கொஞ்சிடும் மறைமலையுடன் ஆட அம்புலீ வருகவே.

70

1. அறிவைத் தருகின்ற கோள் என்று பாராட்டிச் சிவபெருமான் தன்முடி மீது சந்திரனை அமைத்துக் கொண்டார்.

2. தன் சடைமுடி மீது சிவபெருமான் இடங்கொடுத்திருந்த போதிலும் அறிவிழந்த சந்திரன், சிவபெருமானைத் தக்கன் அவமதிக்கச் செய்த யாகத்தில் ஏனைய தேவர்களோடு கூடி வேள்விப் பலியினை ஏற்றுச் சிவபெருமானின் கோபத்துக்

காளானது

குருவும் சந்திரனும் இணைந்திருப்பின் நல்லூழென்றும், பகையுற்றால் நன்மை தாராதென்றும் சோதிடர் கூறுவர். வியாழ குரு என்றது தென்முகக் கடவுளாகிய சிவபெருமானைச் சோதிடக் கருத்துக் கேற்ப இப்பாடல் நயம் பாடப்பட்டுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/214&oldid=1595103" இலிருந்து மீள்விக்கப்பட்டது