உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

8. சிற்றிற் பருவம்

சிற்றில், சிறுபறை, சிறுதேர் முதலிய மூன்று பருவங்களும் ஆண்பாற் பிள்ளைத் தமிழிற்கே உரிய சிறப்புப் பருவங்களாகும். சிறுமியர் மணலினால் வீடு கட்டிச் சிறு சோறு சமைத்து விளையாடுகையில் பாட்டுடைத் தலைவனாகிய குழந்தை தனது சிறு கால்களால் சிதைப்பான் என உட்கொண்டு அங்ஙனம் அவன் சிதையாதிருக்க வேண்டும் முகத்தாற் செய்யுள் அமைத்துத் துதிக்கும் பருவம் சிற்றிற் பருவமாகும். ஓடியாடிச் சுற்றித் திரிந்து விளையாடும் குழந்தையின் பதினேழாவது திங்களில் பாடப்படுவதாகும். தாயர்களும் மற்றவர்களும் பாடுவதாக ஏனைய பருவங்கள் பாடப்பெற இப்பருவம் மட்டும் சிறுமியர் பாடுவதாக அமைத்துப் பாடுவது இயல்பு. நாயகன், நாயகி என்ற வழக்கில் ஆண்டவனை உயிர்கள் சென்றடையும் தத்துவ விளக்கமாக இப்பருவம் பாடப் பெறுவதும் உண்டு.

66

ஆண் இளமை நிரம்பியபோது அறிவு சிறந்து உணர்வும் வளர்ந்து விளங்குகின்றன. பெண் இளமை நிரம்பியபோது உணர்வு சிறந்து அறிவும் வளர்ந்து விளங்குகிறார். வளர்ச்சிக்குரிய வித்துக்கள் விளையாட்டுப் பருவத்திலேயே காணப்படுகின்றன. அமைதியாக இருந்து பெண் சிற்றில் இழைக்கும் பருவத்தில் ஆரவாரமாக இருந்து பெண் சிற்றில் இழைக்கும் நிலையில் இருக்கின்றான். எனவே சிறுமியின் மனம் பெரிதும் ஆக்க வேலையில் முனைந்திருக்கச் சிறுவனின் மனமோ அழிவு வேலையில் ஊக்கம் காட்டுவதால் ஆண் ஆற்றல் மிக்கவனாக வளர்கிறான் என்பது இயற்கையின் வியக்கத்தக்க முறையாக அமைந்திருக்கின்றது டாக்டர் மு.வ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/215&oldid=1595104" இலிருந்து மீள்விக்கப்பட்டது