உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

8. சிற்றிற் பருவம்

(ஆசிரிய விருத்தம்)

புகழும் வடிவுங் கலையறிவும்

புதுமைத் திறனுந் திடமனமும்

பொருந்திச் சிறந்த வுனைஈன்ற

பொலிவார் திருசேர் சின்னம்மை

திகழும் மதியா யொளிருமுகத்

தெளிவில் திளைத்துத் தனைமறந்து

திருத்தித் திருத்தி யழகூட்டித்

திருவைச் சேர்த்துக் களிப்புற்று

மகரக் குழையு சூழியமும்

மதிப்பார் பிறபொன் னணிமணியும்

மகிழப் பூட்டி யனுப்பியதும்

மகளிர்க் கிடுக்கண் செய்தற்கோ

சிகலில்' மலர்ச்செஞ் சீரடியால்

சிறியேம் சிற்றில் சிதையேலே

சிந்தைக் கினிமை தந்திடுவோய்

சிறியேம் சிற்றில் சிதையேலே.

1. கேடில்லாத, குறையில்லாத

191

71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/216&oldid=1595105" இலிருந்து மீள்விக்கப்பட்டது