உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

மறைமலையம் -34 *

மழுவைக் கையிலேந்தியருள்

மழையைப் பொழியுங் கூத்தரசின்

மனத்துள் நிறைந்து மதித்தளித்த மணக்குந் தமிழின் சீரறிந்து

விழுதைப் பரப்பும் ஆலெனவே

விரிந்து படர்ந்து கிளைபரப்ப

விரும்பித் தனியாந் தமிழ்தந்து

விளங்கும் புலமைக் கனியமுதைத்

தொழுதுங் கிண்கிண் ஒலியடியைத்

துடைத்தும் புழுதி நீக்கலொடு தொடங்கி யமைத்து மணிமுத்தால்

துலங்கப் படைத்த சிறுவீட்டின்

செழுமை குலையாய்' என வேண்டும்

சிறியேம் சிற்றில் சிதையேலே

சிந்தைக் கினிமை தந்திடுவோய்

சிறியேம் சிற்றில் சிதையேலே.

1. அழிக்காதே

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/217&oldid=1595106" இலிருந்து மீள்விக்கப்பட்டது