உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

உறங்கிக் கிடந்த தென்னாட்டின்

உணர்ச்சித் துடிப்பை முடுக்கிவிட

ஒளிரா திருளில் மூழ்குமன

உளைச்சல் தனையுந் தடுத்துவிட

இறங்கிக் கருணை வடிவாக

இறையே துணிந்து வந்ததுபோல்'

இருளை யகற்று மொளிவிளக்காய்

இயக்கு சக்தித் திருவுருவாய்ப்

பிறங்கு தமிழை யுலகனைத்தும்

பெரிதாய் விளங்கச் செயவந்த

பெருமைக் குரியாய் நினக்கிந்தப்

பிழையாச் சிறியேம் புனைசிற்றில்

திறங்குன் றிடத்தான் செய்திடலும் சிறப்போ சிற்றில் சிதையேலே

1

193

சிந்தைக் கினிமை தந்திடுவோய்

சிறியேம் சிற்றில் சிதையேலே.

73

1.தென்னாட்டு மக்கள் இதயத்தில் உறங்கிக் கிடந்த மொழி உணர்வைத் தூண்டி, உலகனைத்தும் தமிழ்மொழியின் பெருமையைப் பரப்ப இறைவனே கருணை மறைமலையடிகளாகத் தோன்றினார்.

காண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/218&oldid=1595107" இலிருந்து மீள்விக்கப்பட்டது