உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மறைமலையம் -34 *

நல்லா ரிணக்க முற்றுதவ

நடுநின் றறிவுத் திறன்கொண்டு

நறுந்தேன் சொரியுந் தமிழாய்ந்து

நாட்டிற் கெனப் பனு வல்செய்து

சொல்லா லுயர்ந்த தனித்தமிழின்

சுவையுங் காட்டித் தொகுத்தளித்துச்

சுட்டும் வேதா சலமென்னு

சொல்லை மறையின் மலையாக்கி

நில்லா தொழிந்த உயிராவி

நிலையுந் தெளியக் கூறியவாய்

நிறைய முத்தம் வைத்திருந்தும்

நிலையா மணிகொள் சிற்றில்மேற்

செல்லா திருக்க மனமிலையோ

சிறியேம் சிற்றில் சிதையேலே

சிந்தைக் கினிமை தந்திடுவோய்

சிறியேம் சிற்றில் சிதையேலே.

74

-

வேதம் - மறை, அசலம் - மலை, வேதாசலம் மறைமலை 'மரணத்தின் பின் மனிதர் நிலை' என்ற ஆவி உலக வாழ்வைப்

பற்றிய நூலொன்றை அடிகள் எழுதியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/219&oldid=1595108" இலிருந்து மீள்விக்கப்பட்டது