உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

அயல்நாட் டறிஞர் மொழியாய்வோர்

அறிந்து தெளிந்து முதன்மொழியாய்

அமிழ்தாந் தமிழைத் தெரிந்துரைத்த அரிதா செய்தி யத்தனையும்

மயல்கொண் டறிவா லாராய்ந்து

மயக்கத் தமிழர்க் கெடுத்தோதி

மறையாய்த் திகழும் பதினான்கு

மணிநூல் நுவலும் முப்பொருளின்

நயங்கள் முழுதுங் கருத்திருத்தி

நவிலும் புராணக் கதைநீக்கி நலஞ்செய் கடவுள் கொள்கையெலாம் நலியா வகையிற் கூறியருஞ்

செயல்கள் செய்திப் புவியளந்த

சிறுகால்கள் சிற்றில் சிதையேலே

சிந்தைக் கினிமை தந்திடுவோய்

சிறியேம் சிற்றில் சிதையேலே.

195

75

மறையாய்த் திகழும் பதினான்கு மணி நூல்கள்: தமிழில் உள்ள பதினான்கு சாத்திரங்கள். 1. திருவுந்தியார்,

3.சி

2. திருக்களிற்றுப்படியார், 3. சிவஞானபோதம், 4. சிவஞான சித்தியார், 5. இருபா இருபஃது, 6. ருபா இருபஃது, 6. உண்மை

விளக்கம்,

7. சிவப்பிரகாசம், 8. திருவருட்பயன், 9. வினாவெண்பா, 10. போற்றிப் பஃறொடை, 11. கொடிக்கவி, 12. நெஞ்சுவிடுதூது, 13. உண்மை நெறி விளக்கம், 14. சங்கற்ப நிராகரணம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/220&oldid=1595109" இலிருந்து மீள்விக்கப்பட்டது