உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

மறைமலையம் -34 *

வடலூர் வள்ள லருட்பாவில்

வழியு செந்தேன் சுவைத்தொருநாள் வளமார் “பெற்ற தாய்” எனும்பா

வண்ணப் பண்ணிற் பாடுங்கால்

உடனே தேகம் எனு சொல்லிற்

குகந்த யாக்கை அவ்விடத்தே உறுமா றமைந்தா லோசையின்பம் உயர்வா மெனவே தெளிவுற்றுக்

குடமார் சுடரா யிலங்குமகட்

குரைக்க “நீலா” ஒப்பிடவே

கொண்ட வேதா சலப்போரைக்

கொழிக்கும் மறைம லையெனவே

திடமாய்க் கொண்டு நின்றமகன்

சிறியேம் சிற்றில் சிதையேலே

செப்பத் தமிழைத் தந்திடுவோய்

சிறியேம் சிற்றில் சிதையேலே.

"பெற்ற தாய்தனை மகமறந்தாலும் பிள்ளை யைப்பெறுந் தாய்மறந் தாலும் உற்ற தேகத்தை உயிர்மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந் தாலும் கற்ற நெஞ்சகங் கலைமறந் தாலும் கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும் நற்றவத் தவர் உள்ளிருந் தோங்கும் நமச்சி வாயத்தை நான்மற வேனே”.

78

என்ற திருவருட்பாப் பாடலை அடிகள் தம் மகள் நீலாம்பிகை உடனிருக்கும் போது பாடினர். பின் அடிகள் இப்பாடலில் தேகம் என்ற சொல்லுக்கு யாக்கை என இருப்பின் இனிமையாயிருக்கும். 6 ற ஏற்ற தமிழ்ச் சொல்லொன்று கூற, நீலாம்பிகை அம்மை பிறமொழிக் கலப்பை நீக்கின் தமிழ் சிறக்கும் என்றார். இயல்பாகத் தனித் தமிழார்வம் கொண்ட அடிகள், வேதாசலம் என்ற தம் பெயரை மறைமலை என மாற்றியதோடு தனித் தமிழியக்கமுங்

கண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/223&oldid=1595112" இலிருந்து மீள்விக்கப்பட்டது