உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

மறைமலையம் -34 *

அழுங்கல்' மறைந்த அகத்தினராய்

அருமைத் தமிழர் நெறிமாற்றி

அயலார் கலவை செய்தநிலை

அறவே நீக்கிச் சைவநெறி

ஒழுங்கில் சிறக்க அருளுணர்ச்சி

உயர்ந்த ஒழுக்கம் இறையெண்ணம்

உயிர்கள் தம்பால் அன்பிரக்கம்

உறவும் வேண்டு மெனக்கூறி

மழுங்கிக் கிடந்த தமிழ்ச்சைவம்

மலர்ச்சி யுறமெய் நிலைநிறுவி

மகிழுந் திருமறை யோதிதமிழ்’

மணக்கும் மன்றல் நெறிகண்டு

செழுங்கை மணக்க நீறணிந்து

திகழ்வோய் சிற்றில் சிதையேலே

செப்பத் தமிழைத் தந்திடுவோய்

சிறியேம் சிற்றில் சிதையேலே.

80

1. கெடுதல்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கையுடைய அடிகள் இறைவழிபாடும், திருமணம் முதலிய சடங்குகளும் தமிழ்மொழியிலேயே நடைபெற வேண்டும் என்ற தனித்

தமிழியக்கம் கண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/225&oldid=1595114" இலிருந்து மீள்விக்கப்பட்டது