உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

மறைமலையம் -34 *

9. சிறுபறைப்பருவம்

(ஆசிரிய விருத்தம்)

ஆற்றுப் படைத்தமிழை ஏற்றக் கனிச்சுவையி

லருளொழுக வுலகுபோற்ற

அகமுய்யப் பாடியருட் புகழுற்ற நக்கீர

ரவனிக்கண் வந்துமுழங்கத்

தோற்றந் தரித்தார்கொல் துதிமூல ருருவோகொல் தொடர்ஞான சம்பந்தரோ

துயர் நீக்கு சிவஞான முனிவரோ வள்ளுவர் துலக்கமோ முருகவேளோ

சாற்றுந் தனித்தமிழில் மற்றம் புகாதருளித் தரவந்த இறையனாரோ

சரிநிற்க நிகருற்றுப் புகழ்முற்ற வுறவுற்ற

தகைசாலிம் மழலையென்று

தேற்றங் கொளச்செய்து போற்றிமு ழக்கமிடச்

சிறுபறை முழக்கியருளே

சீருற்ற பெருவாழ்வுப் பேறுற்ற மறைமலை

சிறுபறை முழக்கியருளே

81

அடிகள் தமிழ் மலையாய் நின்றிலங்கினாராதலின் அருளாளர் பலரின் திருவுருவ நினைவைத் இயல்பினராய் விளங்கினார்.

தூண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/227&oldid=1595116" இலிருந்து மீள்விக்கப்பட்டது