உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

203

மன்றாடி யுலகத்து மனமாட உயிராட

மற்றுமுள புவனமாட

மதியாடக் கதிராட மலையாடக் கடலாட

மருவுதீ நிலமுமாட

நின்றாடி வெளியாடி விளையாடு கின்றவன்

நெறிகண்ட தில்லையெல்லை

நிலைமாற்றித் தண்ணொளி நிலவீய அறிவொளி நிறைசுடர்க் கதிருமீய

அன்றாட மிசைகூட்டி யருட் "தோலுந் துகிலு” மெனும்

அணிவாத வூரடிகளின்

அருந்தமிழ்ப் பண்பாடி யம்பலவா ணன்தணை

அழைத்துப் பல்லாவரத்துச்

சென்றாட முழக்கிய திருவாயன் கைமலர்

சிறுபறை முழக்கியருளே

சீருற்ற பெருவாழ்வுப் பேறுற்ற மறைமலை

சிறுபறை முழக்கியருளே.

82

அடிகள் தம்வழிபாடு தெய்வமாகிய அம்பலவாணரை நாளும் வழிபடுகையில் தோலுந் துகிலுங் குழையு சுருள்தோடும் பால் வெள்ளை நீறும் பசு சாந்தும் பைங்கிளியு

சூலமும் தொக்க வளையு முடைத் தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந் தூதாய் கோத்தும்பீ, என்ற திருவாசகப் பாடலை மெய்யுருகப் பாடுவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/228&oldid=1595117" இலிருந்து மீள்விக்கப்பட்டது