உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

மறைமலையம் -34 *

மலையுடன் களிப்புற்று மயங்குமுகில் நாணிட

மருவருந் தென்றலோடு

மளமளவென் றினியநீ ரருவிசல சலவென மகிழ்ந்தோடிக் கழனிசேரக்

குலையுட னிறைவுற்றுக் கதிர்வரப் பினிலோங்க குளிர்வர வேற்புநல்கம்

குலப்புகழ் தரும்வாழை நலத்திற மெடுத்தோதும்

குளிர்பல்லா வரங்கண்டவா

தலைமையிலெழிலோங்கித் தமிழ்ச்சுவை மிகமாந்தும் தனிப்புகழ் திகழ்கரந்தைத்

தமிழ்ச்சங்க மினிதுவாழ்த் தளித்துமு ழங்கிடத்

தவழுமிசை யெங்குமொலிக்கச்

சிலையுட னொருமாரன் புவிவரல் போலானாய்

சிறுபறை முழக்கியருளே

சீருற்ற பெருவாழ்வுப் பேறுற்ற மறைமலை சிறுபறை முழக்கியருளே.

83

மலை சேர்ந்த முகில் நாணுமாறு அருவி நீர் தென்றலோடு மகிழ்ந்து கழனியில் இன்னோசையோடு சேரவும் அங்கு விளைந்த செந்நெற்கதிர்கள் ஓங்கி நிற்கவும் வருவோர்க்குத் தலைசாய்த்து வரவேற்பு நல்குவது போல வாழைமரங்கள் சூழ்ந்ததும் ஆகிய பல்லாவரம்.

தமிழ்ச்சுவை மாந்தும் ஒப்பிலாப் புகழ்பெற்ற கரந்தைத் தமிழ்ச் சங்கம் வாழ்த்தும் புகழ் ஒலி எங்கும் முழங்க அடிகள் மன்மதனைப் போல அழகுடன் புவியில் விளங்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/229&oldid=1595118" இலிருந்து மீள்விக்கப்பட்டது