உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

பிறவாது தோன்றியருள் பெருமானைப் புராணங்கள் பிறப்பிக்கும் நிலைமறுத்துப்

பெரு சக்தி இடமேற்றுப் பிள்ளையுடன் முருகனாய்ப் பிறங்குமொளி வடிவுபோற்றி

இறவாத புகழ்ராம லிங்கரருட் பாக்களின் இயற்றிறந் தன்னை நிறுவி

இனிதுயர்ந் தொளிர்வது தமிழ்நா ரீகமே

எனுமாண்பை யெடுத்துரைத்து

2

மறவாது திருக்கோவில் வழிபாட்டில் தமிழ்மறை

மகிழ்ந்தோத முழக்கமிட்டு

மதிமிக்க குருமார்கள் மக்கள்குல முழுதிலும் மலர்ந்துள்ள தன்மைகூறிச்

சிறவாத பொய்மூடச் சிறுமைத விர்த்தவா

சிறுபறை முழக்கியருளே

சீருற்ற பெருவாழ்வுப் பேருற்ற மறைமலை

சிறுபறை முழக்கியருளே.

205

84

1. புராணங்களில் கடவுளர்க்கு அவதாரம் கூறி, மனிதப் பிறப்பு எடுப்பதாகக் கூறப்படும் செய்தியை அடிகள் வன்மையாய் மறுத்தனர். மறைமலையடிகள் வரலாறு பக்கம் 649.

-

2. தமிழ் நாகரீகம்' என அடிகள் நூல் எழுதியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/230&oldid=1595119" இலிருந்து மீள்விக்கப்பட்டது