உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

தண்டைகள் சிலம்புகள் தமைமிஞ்சு செந்தமிழ்

தருமறைப் பாமுழங்கத்

தாமரை பூத்திடத் தடக்கதிர் கைநீட்டத் தமிழன்னை நாமுழங்கத்

தொண்டுசெய் துணையாளும் துதிபாட மக்களுந்

தொடங்குசொற் பண்முழங்கத்

துவளாது தமிழாய்ந்து சொன்னபய னுற்றவர் துவக்குபுக ழிசைமுழங்கக்

கண்டவர் நெஞ்செலாங் கவர்ந்திடு முள்நாதக்

கனிவென்னு மணிமுழங்கக்

கரைகாணாச் செந்தமிழ்க் கடல்நீந்திப் புகழிசை

கண்டகலை யலைமுழங்கத்

திண்டிறல் கொண்டுகை தண்டமிழ் முரசார்க்கச்

சிறுபறை முழக்கியருளே

சீருற்ற பெருவாழ்வுப் பேருற்ற மறைமலை

சிறுபறை முழக்கியருளே.

207

86

அடிகளின் மனைவி மக்கள் யாவரும் தமிழ் நலம்பேணி

வாழ்ந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/232&oldid=1595121" இலிருந்து மீள்விக்கப்பட்டது