உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

(சந்த விருத்தம்)

நிறையுசுவைத்தமிழ் திகழொளியைத்தர அரியணைமேல் நிலவுவகைக்குவர் நெறிமுறையைத்தரு மொருதுணையே நெடியபுகழ்க்கொரு வளவழியைத்தரு கனிமொழியால் நிலவுலகத்தினி லுறைபெருமக்களி னுளமுறைவோய் துறைசெறிவுற்றிடு கலையறிவைத்தர வுளநிறைவாய்த்

துகளறுமெய்ப்பொரு ளுறுநிலையைப்புகன் றிடுபுகழோய் தொடிகுழையைப்புனை துடியிடையைப்புணர் துணையரசே தொழிலினிமைப்பயன் தருநிலையிற்குரு வெனவருவோய்

கறைபடியச்செயல் கடுகளவுக்கெனும் செயஅறியாய் கருதுசிவப்பெயர் கணமுழுதுற்றிட மறதியுறாய் கடவுளருட்சுவைக் கனியமுதைத் தினம் பருகிடலால் கதைகளெனக்கடல் துவரொழுகத்திரைப் புனலறியாய்

முறைதவழத்தமி ழருளமுதைப்பொழி கொடைமழையே மொழிநலமுற்றிட வழிவகையைத்தரு மறைமலையே முளரி1திகைத்திடச் சிறுகைமுழக்குக சிறுபறையே முதியவருட்தமிழ்க் கொருமுழக்குக சிறுபறையே

1. தாமரைமலர் திகைப்படையும்படி அழகுற்ற கை.

209

90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/234&oldid=1595123" இலிருந்து மீள்விக்கப்பட்டது