உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

10. சிறுதேர்ப் பருவம்

குழந்தையை மரத்தால் ஆன சிறு தேரை உருட்டும்படி வேண்டும் பருவம் சிறுதேர்ப் பருவமாகும். மடநடை பயிலும் பருவத்ததாகிய குழந்தை தனது நடைப்பயிற்சிக்கு உறுதுணையாக உதவும் பொருட்டுச் சிறு தேருருட்டல் இயல்பு. மேலும் குழந்தை வளர்ச்சி பெறப்பெறத் தரையில் நடந்து செல்லுதலேயன்றித் தேர் முதலியவற்றின் ஊர்ந்து செல்லவும் விரும்பும். இவ்விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளச் சிறிய தேர்

மீது

முதலியவற்றை உருட்டி மகிழும். இது குழந்தையின்

ருபத்தோராம் மாதத்தில் பாடப்பெறும். இப்பருவமே ஆண்பாற் பிள்ளைத் தமிழில் இறுதியில் அமையும் பருவமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/235&oldid=1595124" இலிருந்து மீள்விக்கப்பட்டது