உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

ஈன்றிடுந் தாயென இயலிசை கூத்துடன்

இலங்குமுத் தமிழரசியின்

இணையறு மும்முடித் தேரேறி யுலகினில்

இசையுடன் புகழமைத்தவன்

தோன்றிய பன்னிரு திருமுறை பதினான்கு தூயமெய்ச் சாத்திரங்களுந்

துணைவரச் சீர்சைவ சமயத்தே ரேறியே தொடர்ந்தொண் டினைச்செய்தவன்

ஊன்றிற முருக்கியே யுள்ளத்தை ஈர்த்திடு முணர்ச்சிசெய் யெழுதிறத்திசை

ஒலிநல மெனும்பெருந் தேரேறி யுவப்புடன் உயிர்க்குலந் தழைப்பித்தவன்

தேன்றிறச் சொற்சுவைத் தேருடைச் செல்வமே

சிறுதே ருருட்டியருளே

திருக்கழுக் குன்றத்துச் சிவனருள் பெற்றவன்

சிறுதே ருருட்டியருளே.

ஐயமே யகன்றிட அகமுறக் கற்றவை

யனைத்துமே நிலைபெறுவகை

அழிவினைத் தழுவிடாப் பெருநிலைக் காக்கிட அச்சிட்டு வழங்கியருளிச்

213

93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/238&oldid=1595127" இலிருந்து மீள்விக்கப்பட்டது