உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

மறைமலையம் -34 *

சைவசித் தாந்தநூற் பதிப்புக் கழகமும்

தழைத்திட வகையுரைத்துத்

தனித்தமி ழியக்கமுங் கண்டய லோர்மொழித்

தடமுறா நெறிக்குயர்த்தித்

தையலர் மறுமணந் தக்கநற் கல்விநெறி

தடையறச் செயற்குரைத்தே

சலியாம லெழுபத் தைந்தினைக் கண்டுமெய்

தவறாத ஒழுக்கவாழ்விற்

செய்யநற் புகழினைச் செழுமையாய்க் கொண்டவ

சிறுதே ருருட்டியருளே

திருக்கழுக் குன்றத்துச் சிவனருள் பெற்றவன்

சிறுதே ருருட்டியருளே.

94

அடிகள் தாம் கற்றுணர்ந்து ஆய்ந்த கருத்துக்களை நூல்

வடிவில் நிலைபெறச் சய்ய. திருநெல்வேலி சைவ

சித்தாந்தநூற்பதிப்புக் கழகத்திற்குப் பேருதவியாக இருந்தார்.

தனித்தமிழியக்கம், தையலர் மறுமணம், மகளிர் கல்வி இவற்றிற்கு அடிகள் பாடுபட்டார்.

அடிகள் எழுபத்தைந் தாண்டுகள் தாம் வாழ்ந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/239&oldid=1595128" இலிருந்து மீள்விக்கப்பட்டது