உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்

215

ஏறுகொள் சைவநெறி இனிமை துலக்கினும்

இருக்கும் பிறர்சமயமும்

இலங்கிடச் சார்ந்துளார் தம்பாலும் மிக்கினிமை இணைந்திடப் பழகுமெளிமை

நாறுமென் மலர்பல நாரொன்றில் மாலையாம் நல்லதோர் நிலையுணர்த்தி

நலிவிலாச் சைவநெறிப் பொலிவினைக் கூட்டிடும் நகந்தசை யறவுநாட்டும்

பேறுசெய் கடம்பவன சுந்தரப் பாதிரிகள்

பெருமைசேர் மறைகண்டிடப்

பெற்றிகொள் சைவமெடுத் தோதியக் குடும்பமே

பிழிசைவ சாரவைத்துத்

தேறுமெய் வழியோடு திருநீறுத் தந்தவ

சிறுதே ருருட்டியருளே

திருக்கழுக் குன்றத்துச் சிவனருள் பெற்றவ

சிறுதே ருருட்டியருளே.

95

பன்னிற மலர்களும், நார் ஒன்றில் இணைவது போல, பல சமயத்தவர்களும் அடிகளிடம் ஒன்றிப் பழகினார்கள்.

கடம்பவன சுந்தரம் என்ற கிறித்தவர் அடிகளிடம் சைவ சமயக்கோட்பாடுகளைக் கேட்டறிந்து, தாம் சார்ந்திருக்கும் கிறித்தவத்தைக் காட்டிலும் சைவமே சிறந்தது எனத் தெரிந்து தம் குடும்பத்தையும் சைவ சமயத்தைத் தழுவச் செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/240&oldid=1595129" இலிருந்து மீள்விக்கப்பட்டது