உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

7

ஆராய்ச்சியாளர்

1காய்தல் உவத்தலில் லாதுமெய் 2காணுவான் கருத்துடன் நுணுகியாய்ந்து

கண்டநல் லுண்மையை விண்டருள்வ தன்றியுங் கணக்கிலாப் புதுமைபலவும்

ஓய்தல் இலாதபே ருழைப்பினின் விளைவித்தும் உருவாக்கம் செய்தளித்தும்

உலகெலாம் பெருநலம் பெறுவிக்கும் உயர்வுடை ஒண்மையறி வியலறிஞரீர்!

சாய்தல் இலாதமன வுரமுடைய செம்மையன் சலியா துழைத்தறிவினாற்

சரியெனக் கண்டவை தமையெலாந் தெரிவுறச் சாற்றிமா மலையகத்து

3வேய்தல் செயப்பெற்ற மாடமென நிறுவுநன் விளங்கிவளர் புதுமைவேட்பன்

வியன்பழந் தமிழ்நலம் 4விருந்தினிற் காட்டுமிவ் 5விரகனைக் காத்தருள்கவே!

குறிப்புரை :

1. காய்தல்

2.

வெறுத்தல்.

காணுவான் – காணும் பொருட்டு.

3. வேய்தல் கட்டுதல்.

4. விருந்து 5. விரகன்

புதுமை.

திறமுடையோன்.

231

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/256&oldid=1595145" இலிருந்து மீள்விக்கப்பட்டது