உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மறைமலையம் -34 *

8

பலகலைவாணர்

உள்ளங் கவர்ந்துபே ரறிவுநிலை யதனினும் உணர்வுநிலை மேற்சிறப்ப

ஊக்கியுஞ் சுவைவயம் ஆக்கியும் இன்பநிலை ஊட்டுநற் பெற்றிசான்ற

விள்ளருஞ் சீர்த்திசால் தெள்ளுற்ற கலைநலம் வீறுமிகு பேறுபெற்று

வியன்ஞாலம் மேன்மேற் பயன்கொள்ள வாழ்வுறும் விளங்குபல கலைவாணரீர்!

'ஒள்ளிய கொழுந்தமிழ் குயிலென வழங்குநன்

ஒப்பிலா நாநலத்தோன்

உணர்வுநிலை பற்றுறும் அறிதுயில் வல்லுநன் 2ஓகநெறி காட்டுமேலோன்

கொள்ளுந் திருக்கோலம் எழிலார்ந்த பொலிவினன் 3கோணளவு வினையாயினும்

4கோட்டம் இலாதுசெய் நாட்டமிக வுடையநற் 5குரிசிலைக் காத்தருள்கவே!

குறிப்புரை :

1. ஒள்ளிய

ஒளி (புகழ்) வாய்ந்த.

2. ஓகம் யோகம்.

3. கோண் - அணுவின் நூற்றிலொரு கூறு; ‘அணுவைச் சதகூறிட்ட

கோண்’ கம்பர்.

4. கோட்டம் - சாய்வு, திருகல்.

5. குரிசில்

தலைவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/257&oldid=1595146" இலிருந்து மீள்விக்கப்பட்டது