உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

9

ஆட்சியாளர்

1அடிநாள் தொடங்கிநனி மேம்பட்டு வருபெருமை ஆர்தரு பழங்குடியினில்

ஆட்சிசெய் மாட்சியான் அரியதமிழ் போற்றலான் ஆன்றோர் தமைப்பேணலான்

நெடியபுகழ் கொண்டிலகு பெருவேந்தர் ஆண்டவெம் நீள்தமிழ்க் குடிவாணரை

நிறைவேற்ற உறுதிகள் பலசொல்லி ஆட்சிசெய்

நிலையுற்ற பேறுபெற்றீர்!

அடிமையின் மூழ்கியும் அறியாது 2மாழ்கியும்

3அலமந்த தமிழுலகினை

அறிவொடும் உணர்வூட்டி நெறியுறச் செய்துமற்(று) அயலவர் 4விரகுகொன்றோன் 5குடிமக்கள் அரசினர் கடமைகள் விளக்குநன் குற்றங் கடிந்துரைப்போன்

கூர்த்தமதி யாலரிய சான்றாண்மை யாற்பெரிய 6குருமணியைக் காத்தருள்கவே!

குறிப்புரை :

1.

அடிநாள் தோற்றநாள்.

233

2. மாழ்கியும் - மயங்கியும்.

3.

4.

அலமரல் - ‘அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி' - (தொல்). விரகு தந்திரம்.

5. குடிமக்கள் - 'குடிமக்கள் கடமை' என்பது அடிகளாரின் கட்டுரைகளில்

ஒன்று.

6. குருமணி - நிறம் பொருந்திய மாணிக்கம் போல்பவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/258&oldid=1595147" இலிருந்து மீள்விக்கப்பட்டது