உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

மறைமலையம் -34 *

10

பொதுத்தொண்டர்

1மன்பதை நலஞ்சிறந் தின்புறத் தந்நலம்

மறுத்துத் துறந்துசற்றும்

2மடியாது 3மானமுங் கருதாது வந்துறும்

மலையனைய பலதலையவாம்

துன்பங்கள் தமையெலாம் நகையாடி மேற்கொண்ட தூயவினை முற்றநன்றே

தொண்டுசெய் கின்றபெரு மாண்பினீர் எம்மனோர் தொழநின்ற மாபெரியரீர்!

பன்மையாந் தொண்டினும் முன்மைய(து) அடிப்படைப்

பான்மையது நல்லறிவினைப்

பாங்குற விளங்குமா றோங்குவிப் பதுவெனப் பலதுறையி னுஞ்சிறக்கத்

தன்மெய்ப் பெரும்புலமை நன்னெஞ்ச வுறுதியால் தாளாண்மை கொண்டதகவால்

தக்கபணி யாற்றியொரு மிக்கபுகழ் உறுபெருந் தலைவனைக் காத்தருள்கவே!

குறிப்புரை :

1. மன்பதை

2. மடியாது

3.

உயிர்ப்பன்மை, மக்கட்பரப்பு.

சோம்பலுறாது.

மானமும்... - 'குடிசெய்வார்க்கு' எனுங் குறள் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/259&oldid=1595148" இலிருந்து மீள்விக்கப்பட்டது