உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

மறைமலையம் -34 *

1

12

'இறாற்கண் ணிழிந்தசெந் தேனுற்ற 2பெற்றத்தின்

இனியபாற் றீங்கட்டியை

இளையதன் குழவிக்கு மந்திவாய் ஊட்டுநல் இரும்பொழிற் சூழல்யாண்டும் 3அறாப்பண் முழக்கத் திருக்கழுக் குன்றத்(து) அமர்ந்துறையும் எந்தையருளால்

4அயலவர வென்றுதிரு நெறியே தழைக்கவும் அருந்தமிழ் செழித்தோங்கவும்

5நறாச்சிந் தெழின்மலர் வோய 7சின் னம்மையும் நற்றவச் 7சொக்கப்பரும்

நஞ்செல்வ மென்றுநனி கொஞ்சிவிளை யாடிமகிழ் நன்மதலை யாகிவந்தோய்

8சிறார்க்கினிய செந்தமிழ் தந்தபே ரருளாள

செங்கீரை யாடியருளே!

தென்னா டெழுச்சியுற முன்னோடி யாயவன் செங்கீரை யாடியருளே!

குறிப்புரை :

1. இறால்

தேனடை.

2. பெற்றம் - ஆ(பசு).

3. அறாப்பண் - பண் அறா – திருமுறை இன்னிசை ஓவாத.

4.

அயலவர - அயலவர்களுடைய.

5. நறா

-

6.

வாய

7.

தேன்.

வாயையுடையாய்.

சின்னம்மை, சொக்கப்பர்

அடிகளாரின் பெற்றோர்.

8. சிறார்க்கினிய செந்தமிழ் - சிறுவர்க்கான செந்தமிழ் இளைஞர்க்கான இன்றமிழ் என்பன அடிகளாரின் நூல்கள்.

மேனின்றொழுகும் தேன் திருவருளாகவும், பெற்றத்தின் பாலுறை (பாற்கட்டி) தமிழாகவும், தேனுறைந்த பாற்கட்டி திருமுறைகளாகவும், மந்தி குழவிக்கு ஊட்டுவது மெய்ந்நூலாசிரியன் மாணாக்கர்க்கு அருள் செய்வதாகவும் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/261&oldid=1595150" இலிருந்து மீள்விக்கப்பட்டது