உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

13

1கொந்துபடு முத்தமிழ் மேன்மேற் செழித்தினிது கொழுமையுற் றோங்கிவளரக்

கூறுபிற மொழியிலுள பேரறிஞர் தங்கள்நூல் கொழித்தெடுத் தாங்கவற்றை

நந்தமக் குரியதாய் மொழிவழக் கிற்கிசையும் நடையிற் பெயர்த்துயாக்கும்

நன்முறை தெரிந்துயாம் பின்பற்ற வழிகாட்டி நானிலத் தெதிரிலாத

வெந்திறல் மிக்குடையர் ஆங்கிலப் பெரியமொழி வியன்புலவர் 2அடிசன்செயும்

வீங்கிசைக் கட்டுரைகள் நூல்நயங் கண்டினிய விரிதமிழில் மொழிபெயர்த்துச்

3சிந்தனைக் கட்டுரைகள் தந்தருள் 4முருகவேள் செங்கீரையாடியருளே!

தென்னா டெழுச்சியுற முன்னோடி யாயவன் செங்கீரையாடியருளே!

237

குறிப்புரை :

1. கொந்து

கொத்து.

2. அடிசன் – ஆங்கிலப் பேரறிஞர்.

3. சிந்தனைக் கட்டுரைகள் - அடிகளாரின் நூல்.

4. முருகவேள் - அடிகளாரின் புனைபெயர்: மேற்படி நூலில் இடம் பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/262&oldid=1595151" இலிருந்து மீள்விக்கப்பட்டது