உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மறைமலையம் -34 *

14

உலகத் தியற்கையும் மக்கள்தம் இயற்கையும் ஒண்மைமிகு நுண்ணறிவினால்

உற்றாழ்ந்து நோக்கிநன் காராய்ந்து 1விழுமிய ஓங்குறத் தேர்ந்துபெரிதும்

நலமிக்க மொழிநடையில் உண்மையாம் அணியொளிர நற்றமிழ் இலக்கியஞ்செய்

நாவீறு நனியிலகு மேலைநாட் புலவர்தம் நயத்தக்க மாபெருமையும்

இலவாய வற்றையும் உளவேனுங் கோடியாய் இயற்கையின் இறப்பப்புனை

ஏற்றமில் பிற்றைநாட் புலவர்தஞ் சிறுமையும் 2இருந்தமிழில் 3ஆங்கிலத்தில்

4செலப்பேசி நூல்செய்த பேராண்மை யாளநற் செங்கீரை யாடியருளே!

தென்னா டெழுச்சியுற முன்னோடி யாயவன் செங்கீரை யாடியருளே!

குறிப்புரை :

1. விழுமிய - சிறந்தன; பெயர்ச்சொல்.

2. இருந்தமிழில் முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர் அடிகளாரின்

3.

நூல்கள்.

ஆங்கிலத்தில்

4. செலப்பேசி

Ancient and modern Tamil poets

மேற்படி நூல்(கள்) சென்னை மாநிலத் தமிழாசிரியர்

மாநாட்டுத் தலைமைப் பொழிவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/263&oldid=1595152" இலிருந்து மீள்விக்கப்பட்டது