உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

15

பெருவாழ்வு பெற்றிலகு திருவார்ந்த செந்தமிழ் பிழைப்புறு மயன்மொழிகளான்

பிணிப்புற்று நலிவுண்ட இழிநிலை தனைக்கண்டு பெருகவும் நுணுகியாய்ந்தே

அருளாளர் வடலூரர் பாவுற்ற 1தேகத்தை

அரியதமிழ் யாக்கையாக்கின்

அழகுநனி பொலியுமென அருமந்த 2நன்மகட்(கு) அறிவுறுத் தன்றுதொட்டுப்

பொருளாழம் மிக்கசொல் மலியிளந் தமிழினிற் பொருந்தா வயற்சொற்களைப்

புகுத்தல் தவிர்த்தினிது தூய்தாய் வளர்க்கெனப் புகன்றுபகை வென்றுநாட்டித் 3தெருளார்ந்த பலதுறை நூல்களுந் தந்தவா செங்கீரை யாடியருளே!

தென்னா டெழுச்சியுற முன்னோடி யாயவன் செங்கீரை யாடியருளே!

239

குறிப்புரை :

1. தேகத்தை - 'உற்ற தேகத்தை' என்னுந் திருவருட்பாவிலுள்ள ‘தேகம்’ என்னும் சொல்லை.

2. நன்மகள் - திருவாட்டி நீலாம்பிகையம்மையார்.

3. தெருள்

தெளிவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/264&oldid=1595153" இலிருந்து மீள்விக்கப்பட்டது