உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

25

பாவலன் அரிய உரைவல்லான்

பரவுறும் உரைநடை தனிவல்லான் பாடம் பயிற்றும் பேராசான்

பண்ணியல் நாடக முறைதெரிவோன் நாவலன் உடனூல் மருத்துவனாம்

நலமார் அறிதுயில் வல்லுநனால்

நமதாஞ் சிவநெறி ஆசிரியன்

நாடுறும் அச்சுக் கலையறிவன்

காவலன் எனநின் றின்றமிழைக்

காக்கும் ஏரணப் போர்மறவன் கருதுறு மொழிநூல் ஆய்வாளன் கைவரு 'தாளிகை யாளனெனத்

2தாவறு மெய்புகழ் மேவுபெருந்

தலைவா தாலோ தாலேலோ! தன்னே ரில்லாத் தமிழாளி தாலே தாலோ தாலேலோ!

குறிப்புரை :

1. தாளிகை

2. தாவறு

இதழ்.

குறைவற்ற.

249

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/274&oldid=1595163" இலிருந்து மீள்விக்கப்பட்டது