உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

27

பரவுறு மயலவர் சமய மெலாமிப் பைந்தமிழ் நிலவரையில்

பழமைச் சிவநெறி தளர்வுறு மாறே பன்னெடு நாண்முதலா

விரவுத லுறலின் தமிழர் மருண்டு

வீழும் நிலைகண்டு

விழைவுறும் 'இந்து மதப்பற் றவையம் விளங்கக் கண்டதொடும்

உரமிகு சான்றோர் பரவுசெந் நெறியின் உயிர்முடி புலகுகொள

ஊர்நகர் தோறும் கிளைபல கொண்டே

ஒள்ளிய பணிசெய்யும்

தரமிகு 2பேரவை நிறுவிய பெரும

தாலோ தாலேலோ!

தண்டமிழ் தழையத் தழையுங் கொண்டல் தாலோ தாலேலோ!

குறிப்புரை :

1. இந்து... - 'இந்து மதாபிமானிகள் சங்கம்' அடிகளார் நாகையில் இளமைக் காலத்தில் நிறுவியது.

2. பேரவை

பெற்றது.

"சைவசித்தாந்த மகாசமாசம்' அடிகளாரால் நிறுவப்

251

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/276&oldid=1595165" இலிருந்து மீள்விக்கப்பட்டது